பாமக நிறுவனர் ராமதாசும், பாமக தலைவர் அன்புமணியும் ஒன்றிணைக்கோரி தைலாபுரம் தோட்டத்தில், அன்புமணி ஆதரவாளர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாமகவில் நீடிக்கும் குழப்பங்களுக்கு இடையே, இருவரும் போட்டிப்போட்டு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியை சேர்ந்த அன்புமணி ஆதரவாளர்கள், தைலாபுரம் தோட்டம் முன்பு தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.
தீக்குளிக்க முயன்றவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.