சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் நிறுத்தம் - தவிர்க்கப்பட்ட விபத்து
சென்னையில் இருந்து சுமார் 100 டன் சரக்குகளுடன் ஹாங்காங்கிற்கு புறப்பட்ட விமானத்தில், திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் ஓடு பாதையில் நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங்கிற்கு கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் 5 விமான ஊழியர்களுடன் புறப்பட்டது. அப்போது விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்ததையடுத்து விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தபட்டது. பின்னர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, விமான பொறியாளர்கள் குழுவினர், பழுதடைந்த இயந்திரங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.