பைக் டாக்ஸி புக் செய்து சென்றவர் டிரைவரோடு கோர மரணம் - தாம்பரத்தில் பயங்கரம்

Update: 2025-08-19 05:31 GMT

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக் டாக்ஸியில் சென்ற இருவர் பலி

தாம்பரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பைக் டாக்ஸியில் சென்ற இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாம்பரத்தில் இருந்து குரோம்பேட்டைக்கு செல்ல திருப்பூரை சேர்ந்த பாலமுருகன் என்பவர் பைக் டாக்ஸி புக் செய்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த பவுல்ராஜ் என்பவருடன் பாலமுருகன் சென்றுள்ளார். சானடோரியம் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பைக் டாக்ஸி ஓட்டுநர் பவுல்ராஜ் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்