தட்டச்சு தேர்வுகள் இனி 'தட்டச்சு பொறியில்' நடைபெறாது என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தட்டச்சு பயிற்றுநர்கள் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 2026 வரை மட்டும்தான் தட்டச்சு தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்றும், அதன் பிறகு கணினி மூலமாக மட்டுமே தட்டச்சு தேர்வுகள் நடைபெறும் என்றும், தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது. இந்த சூழலில், இந்த அறிவிப்பை உடனே ரத்து செய்ய வேண்டும் எனவும், தற்போது நடைமுறையில் உள்ள Lower Level, Higher Level Typewriting தேர்வுகளை அப்படியே தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.