சென்னை திருவான்மியூரில் தமிழக பாஜக சார்பில் நடைபெறும் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் டெல்லியில் இருந்து தனி விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்திறங்கினார். சென்னை வந்த அவரை பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.