Pani Puri | Tea | Police | பானி பூரி, டீ சாப்பிட செல்பவர்களை ஸ்டன் ஆக விட்ட செய்தி - உஷார் மக்களே

Update: 2025-08-28 03:29 GMT

திருவிடைமருதுார் அருகே திருலோகி பகுதியில், வங்கி கணக்கு, சிம் கார்டுகள் ஆகியவை மூலம் ஆன்லைன் மோசடி செய்யும் கும்பலிற்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் ரோந்து பணியின் போது காரில் பிடிபட்ட 4 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதைத்தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ் விசாரணை மேற்கொண்டதில், கோவையில் பானிபூரி, டீ சாப்பிட வருவோரிடம், “வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுக்காக ஆதார் கார்டு கொடுத்தால் 5 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை தருவோம்” என்று கூறி, ஆதார் எண்ணை பெற்றது தெரியவந்தது. பின்பு அதன் மூலம் வங்கி கணக்கு, சிம் கார்டுகள் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை சுமார் 150 பேரின் ஆதார் கார்டுகளை ஏமாற்றி பெற்று ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு, அதன் மூலம் வரும் பணத்தை எடுக்கவும் பயன்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக, போலீசார் 7 பேரை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்