உலக நன்மை வேண்டி பழனி மலையடிவாரத்தில் புலிப்பாணி ஆசிரமத்தில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். யாகத்தில் அகத்தியர், போகர் , புலிப்பாணி உள்ளிட்ட 18 சித்தர்களுக்கு பூஜை நடைபெற்றது. போகர் மற்றும் புலிப்பாணி எழுதிய ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஜப்பான் நாட்டவர்கள் தமிழர் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டு வழிபட்டனர்.