ஓபிஎஸ் எழுதிய திடீர் கடிதம் - அரசியல் களத்தில் நாளை என்ன நடக்க போகிறது?

Update: 2025-07-25 02:49 GMT

தமிழகம் வரும் பிரதமர் மோடியை ஜூலை 26ம் தேதி சந்திக்கிறார் ஓபிஎஸ்?

26ஆம் தேதி வருகை தரும் பிரதமர் மோடியை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், வரும் 26-ஆம் தேதி, தூத்துக்குடியில் புதிய விமான நிலைய டெர்மினல், விரிவாக்கப்பட்ட ரன் வே மற்றும் மதுரை - போடிநாயக்கனூர் ரயில் வழியின் மின்மயமாக்கல் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைக்க தாங்கள் வருகை தருவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த முக்கிய நிகழ்வில், தங்களை தூத்துக்குடி விமான நிலையத்தில் வரவேற்று, பின்னர் வழியனுப்பும் பெருமையை அனுமதிக்கப் பெற்றால், அது மிகுந்த மரியாதையும், நன்றியுடனும் நிறைந்த ஒரு நிகழ்வாக தனக்கு இருக்கும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்