6 லட்சத்தில் ரெடியான ஆபரேஷன் சிந்தூர் விநாயகர் - தத்ரூபமாக தெரிந்த நெருப்பு
ஆபரேஷன் சிந்தூர் மாடல் விநாயகர் சிலை பிரதிஷ்டை
விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஹைதராபாத்தில் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை பிரதிபலிக்கும் வகையில், விநாயகர் சிலையை இளைஞர் அமைப்பினர் பிரதிஷ்டை செய்துள்ளனர். ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட ரஃபேல் போர் விமானம், பிரமோஸ் ஏவுகணை, ராணுவ வீரரை போல உடையணிந்த விநாயகர் சிலைகள் என தத்ரூபமாக அந்த நடவடிக்கையைக் காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும், பீரங்கியிலிருந்து குண்டு வெளியேறுவதைப் போன்ற வடிவமைப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்காக 6 லட்சம் ரூபாய் வரை செலவானதாக இளைஞர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.