Ooty Tiger Attack ரத்தவெறியோடு வந்து காளை மீது பாய்ந்த புலி - ஊட்டியில் நடுங்கவிடும் சம்பவம்
கோசாலையில் காளையை வேட்டையாட முயன்ற புலி.உதகை அருகே, மாவனல்லா கிராமத்தில் பழங்குடியின பெண்ணை கொன்ற ஆட்கொல்லி புலி, காளை மாடு ஒன்றை வேட்டையாட முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோசாலை ஒன்றில் பராமரிக்கப்பட்டு வரும் அந்த காளைக்கு, கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில், போக்கு காட்டும் புலியை, விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.