இன்ஸ்டாவில் `ONE SIDE LOVE' டார்ச்சர்..சிக்கிய இன்ஜினியர்

Update: 2025-07-16 13:26 GMT

இளம்பெண் குறித்து இன்ஸ்டாவில் அவதூறு - கட்டிட பொறியாளர் கைது

சென்னை ஆதம்பாக்கத்தில் இளம்பெண் குறித்து இன்ஸ்டாகிராமில் அவதூறு பரப்பிய கட்டிட பொறியாளரை போலீசார் கைது செய்தனர்.இது தொடர்பாக பாதிக்கப்பட்ட புதுச்சேரியை சேர்ந்த இளம்பெண், ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில் கணபதி என்பவர், இன்ஸ்டாகிராமில் தன்னை பின் தொடர விருப்பம் தெரிவித்து, காதலிக்க வற்புறுத்தியதாகவும் அதனை, தான் ஏற்காததால் போலியான கணக்குகளை தொடங்கி தன்னை பற்றி அவதூறு பரப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தர்மபுரி மாவட்டம் வெள்ளக்கல்லை சேர்ந்த கணபதி என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு ஐபோனை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்