``அட நம்ம நாய் தான கடிச்சது’’ - ஊசி போடாமல் அசால்ட்டாக இருந்தவர் 2 மாதத்தில் மரணம்

Update: 2025-04-18 09:36 GMT

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சேவூரில் தெரு நாய் கடிக்கு முறையான சிகிச்சை எடுத்து கொள்ளாததால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அற்புதராஜ் என்பவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தெரு நாய் கடித்துள்ளது. இதற்கு முறையான சிகிச்சை எடுத்து கொள்ளாததால், அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அற்புதராஜ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்