"கண் முன்னே ஒபாமாவுக்கு கைவிலங்கு.. சிரித்து ரசித்த டிரம்ப்..."

Update: 2025-07-21 13:18 GMT

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு கைவிலங்கிட்டு குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று சிறையில் அடைப்பதைப் போன்ற ஏஐ வீடியோவை அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... அதிபர் உள்பட யாராக இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்று ஒபாமா பேசும் காட்சிகளுடன் வீடியோ துவங்குகிறது...

தொடர்ந்து அதிபர் அலுவலகத்தில் டிரம்ப்பும், ஒபாமாவும் அருகருகே அமர்ந்திருக்க...ஒபாமாவை அதிகாரிகள் கை விலங்கிட்டு குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று சிறையில் அடைப்பதைப் போலவும், அதைக்கண்டு டிரம்ப் ரசித்து சிரிப்பதைப் போலவும் ஏஐ வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.. இதை பகிர்ந்துள்ள டிரம்ப், இது சித்தரிக்கப்பட்டது என்பதைக் கூட தெரிவிக்காதது கண்டனங்களைக் குவித்து வருகிறது...

டிரம்ப்பின் 2016 தேர்தல் வெற்றியை ஒபாமா குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக டிரம்ப் நிர்வாகத்தின் தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட் குற்றம் சாட்டி இருந்த நிலையில், டிரம்ப் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்