விதைகள் மட்டும் அல்ல.. மரபும் உயிர்பெறுகிறது!பாரம்பரியம் பேசும் விதை நெல் திருவிழா!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் பள்ளியில் பாரம்பரிய விதை நெல் திருவிழா நடைபெற்றது. இதில் பாரம்பரிய அரிசி வகைகள், விதை நெல் வகைகள், மரபு வழி காய் கனி விதைகள், சிறுதானியங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் பொம்மலாட்டம், தோல்பாவை கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.