Kanniyakumari | ViralVideo | நிற்காமல் சென்ற அரசு பேருந்து -பின்னாலேயே ஓடிய பெண்கள்..பரபரப்பு வீடியோ
கன்னியாகுமரி மாவட்டம், திட்டுவிளையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, தக்கலை வெள்ளியோடு சந்திப்பில் நிற்காமல் சென்றதால், காத்திருந்த பெண்கள் சுமைகளுடன் பேருந்தின் பின்னே ஓடிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், கட்டணமில்லாப் பயணம் என்பதால் ஓட்டுநர்கள் இப்படி நடந்துகொள்வதாக நெட்டிசன்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.