``அடகு வைப்பதில் புதிய ரூல்ஸ்கள்.. சாமானியர்களின் தலையில் இடி’’ - அமைச்சர் ஆவேசம்

Update: 2025-05-22 06:03 GMT

தங்க நகை அடமானம் புதிய விதிமுறைகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்

தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் ரிசர்வ் வங்கி இடியை இறக்கி இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளில், நகையின் மதிப்பில் முன்பை விட 5% குறைத்து, 75% தான் கடன் வழங்கப்படும் என்பது, அவசர தேவைக்காக வங்கிகளை நாடிவரும் மக்களை நேரடியாகப் பாதிக்கும் முடிவு என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதேபோல, அவசரம் என்று வரும் மக்களை அத்தியாவசியமற்ற விவரங்களையும், ஆதாரங்களையும் கேட்டு அலைக்கழிக்கும் இந்த புதிய நடைமுறையை மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்