Nellai News | நெல்லையில் அக்-7 கடையடைப்பு - வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு
நெல்லையில் வரும் அக்டோபர் ஏழாம் தேதி முழு கடையடைப்பு நடத்தப்படும் என வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக மாநகராட்சி பகுதியில் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை சரக்குகளை இறக்கி ஏற்றுவதற்கு, லாரிகள் வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது லாரிகள் மாநகரப் பகுதிக்குள் வர, ஆட்சியர் தடை விதித்தது சிரமமாக உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஏழாம் தேதி காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை கடையடைப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.