Nellai | கைவிட்ட ஹாஸ்பிடல்? கடைசியில் பவர் கட்டர் வைத்து அறுத்த காட்சி
மருத்துவர்களின் தவறான அறிவுரை?- தப்பித்த கை விரல்கள்
நெல்லை பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில், மாணவரின் விரலில் மாட்டிக் கொண்ட மோதிரத்தை இரும்பு அறுக்கும் இயந்திரம் கொண்டு அகற்றிய காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர் தன் கையில் மோதிரம் அணிந்திருந்த நிலையில், நாள்பட நாள்பட அது இறுகத் தொடங்கியுள்ளது. இதனை அகற்ற மருத்துவமனை சென்ற நிலையில், தீயணைப்பு நிலையத்திற்கு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. மாணவர் அங்கு சென்றதும், தீயணைப்பு வீரர்கள் அதனை இரும்பு அறுக்கும் இயந்திரம் கொண்டு அகற்றிய காட்சி வைரலாகி, கடும் கண்டனங்கள் பதிவாகி வருகின்றன.