நாமக்கல் மாவட்டம் எருமபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஒருவர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
கடின உழைப்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற துர்காமூர்த்தியை, மாணவர் விஜய் கடிதம் மூலம் பாராட்டியிருந்தார். அத்துடன் தங்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று மாணவர் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில் பள்ளிக்கு சென்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர், மாணவர் விஜயின் கடிதத்தை படித்து கண்கலங்கியதுடன், மாணவனுக்கு புத்தகத்தை பரிசாக வழங்கினார். தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.