திருப்பூர், காங்கேயம் அருகே அமாவாசை தினத்தன்று, நடைபெற்ற மர்ம பூஜை காரணமாக பொது மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓலப்பாளையம், அருகே பூசாரிவலசு பகுதியில் திருமண்கரடு அமைந்துள்ளது. இங்கு கடந்த 2018ம் ஆண்டு இரும்புத்தாது உள்ளதா என அரசு ஆய்வு செய்து, பின்னர் அதை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆடி அமாவாசை தினத்தன்று சிலர் இங்கு மர்மமான முறையில் பூஜை நடத்தியுள்ளனர். இது குறித்து விசாரிக்க கிராம மக்கள் அங்கு சென்ற நிலையில் தப்பிக்க முயற்சித்துள்ளனர். பின்னர் இதில் நான்கு பேர் மட்டும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், இப்பகுதியில் நரபலி நடந்ததா, புதையலுக்காக பூஜை நடந்ததா என கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.