திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக விழாவில் இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்கிய நிகழ்வு சமூக நீதிக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஹஜ்ரத் சுல்தான் சிக்கந்தர் தர்கா பள்ளிவாசலில் அன்னதானம் வழங்கபட்டது. சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பள்ளிவாசலுக்குள் அமர்ந்து உணவருந்தினர். திருப்பரங்குன்றம் மலை தொடர்பான பிரச்சனைக்கு பிறகு நடைபெறும் கும்பாபிஷேகம் என்பதால் பிரச்சினைகள் ஏதும் எழுமோ என்ற அச்சம் இருந்த சூழலில் இந்து-இஸ்லாமியர் உறவு சமூக நீதிக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.