பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய போதை ஆசாமிகள் இருவர் கைது.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது முகையூர் பகுதி.
இந்த பகுதியில் HB பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்கிற்கு வந்த போதை ஆசாமிகளான அந்தோணி சிபி மற்றும் ஆண்டனி சூர்யா ஆகியோர் 100 ரூபாய் கொடுத்துவிட்டு 110 ரூபாய்க்கு பெட்ரோல் போடச் சொன்னதாக கூறப்படுகிறது. பெட்ரோல் பங்க் ஊழியர் அதற்கு மறுத்து 100 ரூபாய்க்கு மட்டுமே பெட்ரோல் போட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் இருவரும் பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக தாக்கக்கூடிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அரகண்டநல்லூர் போலீசார் போதை ஆசாமிகள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது