Mother | தாயின் ஓரினச்சேர்க்கை வெறியாட்டம்.. 6 மாத சிசு கொடூர கொலை.. நெஞ்சே வெடிக்கும் சம்பவம்
ஒசூர் அருகே உள்ள சின்னட்டி என்ற கிராமத்தில், தாய்ப்பால் கொடுத்தபோது புரை ஏறி, 6 மாத குழந்தை உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தில், திடுக்கிடும் பிண்ணனி வெளியாகி உள்ளது. ஓரினச்சேர்க்கைக்கு இடையூறாக இருப்பதாக பக்கத்து வீட்டின் சுமித்ரா என்ற 22 வயதே ஆன இளம்பெண்ணின் பேச்சைக் கேட்டு, பாரதி என்ற 26 வயது பெண் தனது 6 மாத குழந்தையை கொலை செய்ததாக குழந்தையின் தந்தை ஆதாரங்களுடன் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி வழக்கு பதிவு செய்த போலீசார், குழந்தையின் தாய் பாரதியையும், சுமித்ராவையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்த நிலையில், அதன் அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.