``மாப்ள அவர் தான்.. ஆனா..’’ - CM போட்ட Thuglife ட்வீட்

Update: 2025-06-15 02:15 GMT

அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி

பிரதமர் வீடு வழங்கும் திட்டம், பிரதமர் மீன்வளத் திட்டம், உயிர்நீர் ஆகிய திட்டங்களுக்கு மாநில அரசுதான் அதிக நிதி தருவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்த சமூக வலைதள பதிவில், பிரதமரின் பெயரையும், ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் மத்திய அரசைக் காட்டிலும் மாநில அரசே அதிக நிதி அளிப்பதாக முதல்வர் தெரிவித்தார்... மேலும் மத்திய உள்துறை அமைச்சரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டால் தான், படையப்பா படக் 'காமெடி' போல "மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது" என அரசு விழாவில் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டதாகக் கூறினார். இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்