சிவகங்கை மாவட்டத்தில் போலி முகவரியை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கிய வழக்கில் மாவோயிஸ்ட் ரூபேஷுக்கு ஆயுள் தண்டனையும், 31 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிவகங்கை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளிதுள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு கோவையில் கைது செய்யப்பட்ட ரூபேஷ், சிவகங்கை மாவட்டம், இடையன்வயல் பகுதியைச் சேர்ந்த நேரு என்பவரின் முகவரியைப் பயன்படுத்தி போலி சிம்கார்டு வாங்கியது விசாரணையில் நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கில் எட்டு பிரிவுகளில் ரூபேஷ் மீதா குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிது நீதிபதி அறிவொளி தீர்ப்பளித்தார்.