சென்னை ஏசி மின்சார ரயில் சேவையில் மே 2 முதல் முக்கிய மாற்றம் - வெளியான தகவல்
சென்னை புறநகர் ரயில் சேவையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள குளிர்சாதன மின்சார ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை 29 கிலோமீட்டர் குளிர்சாதன ரயிலில் 85 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான 60 கிலோ மீட்டருக்கு 105 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மும்பையில் இயக்கப்படும் வந்தே மெட்ரோ ரயிலுடன் ஒப்பிடுகையில் இந்த கட்டணம் இரண்டு மடங்கு அதிகம் எனவும், சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை விடவும் அதிகம் எனவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.