தாமாக முன் வந்து வழக்கில் சேர்த்த மதுரை கோர்ட் - அதிரடி உத்தரவு

Update: 2024-12-11 14:51 GMT

தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை முறைகேடாக தஞ்சாவூர் மேயர் ராமநாதனின் மனைவி பொன்னுமணி பெயரில் மாற்றியதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. தமிழக காவல் துறை விசாரணை செய்தால் நீதி கிடைக்காது என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. இந்த வழக்கு விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், வழக்கின் எதிர் மனுதாரராக தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலரை தாமாக முன்வந்து. வழக்கில் சேர்த்து உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட இடத்தின் UDR ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்