Madurai | சிமெண்டையே பெயர்த்த காற்று.. பைக் மீது பறந்து விழுந்த பேரிகார்டு - சிக்கிய தம்பதி
மதுரை ஓபுளா படித்துறை மேம்பாலத்தில் பலத்த காற்று காரணமாக பேரிகார்டுகள் விழுந்து பைக்கில் சென்ற தம்பதி காயமடைந்தனர். சாலையில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து அவ்வழியாக பைக்கில் சென்ற தம்பதி மீது விழுந்தது. இதனால் அவர்களுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், தகுந்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.