Madurai Market Issue | டிராக்டருக்கு அடியில் தலையை வைத்து அதிரவிட்ட வியாபாரிகள் - மதுரையில் பரபரப்பு

Update: 2025-11-17 04:51 GMT

மதுரை தபால் தந்தி நகரில் காய்கறி வாரச் சந்தைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இங்குள்ள பாமா நகரில் இயங்கி வரும் வாரச்சந்தையை இடமாற்றம் செய்ய மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், ஞாயிற்றுக்கிழமை வியாபாரிகள் சந்தை அமைக்க மாநகராட்சி அதிகாரிகளும், காவல்துறையினரும் அனுமதி மறுத்தனர். இதனால் கோபமடைந்த வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டு, காவல் துறை வாகனங்களின் குறுக்கே படுத்துப் போராட்டம் நடத்தினர். சுமார் 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, காவல்துறையின் பேச்சுவார்த்தையை ஏற்று, வியாபாரிகள் சந்தை அமைத்து வியாபாரம் செய்யத் தொடங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்