தமிழகத்தில் தயாரான கோல்ட்ரிஃப் இருமல் மருந்துக்கு தடை போட்ட மத்திய பிரதேசம்

Update: 2025-10-04 17:39 GMT

தமிழகத்தில் தயாரான கோல்ட்ரிஃப் இருமல் மருந்துக்கு தடை போட்ட மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசத்தில் Coldrif இருமல் மருந்துக்கு தடை விதிப்பதாக, அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான Coldrif இருமல் மருந்து, தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட நிலையில்,

இதுகுறித்து விசாரிக்குமாறு தமிழ்நாடு அரசிடம் மோகன் யாதவ் கோரிக்கை விடுத்திருந்தார்.

தமிழ்நாடு அரசு விசாரித்து அறிக்கை அளித்ததன் அடிப்படையில்,

அந்த இருமல் மருந்துக்கு தடை விதித்து, மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

குழந்தைகள் உயிரிழப்பு குறித்து விசாரிக்க மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில்,

குற்றவாளிகள் எக்காரணம் கொண்டும் தப்ப முடியாது என்று மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்