காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் சுங்கசாவடியில் லாரி கண்ணாடியை உடைத்து ஓட்டுநரை தாக்கி பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர். மதுரையை சேர்ந்த லாரி ஓட்டுநர் அசோக்குமார் கடந்த 9 ஆம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து நியாய விலை கடைகளுக்கு பாமாயில் எடுத்து செல்லும்போது, முன்னால் காரில் சென்ற வேல்முருகன் என்பவர் திடீரென லாரியை மறித்து அசோக்குமாரை தாக்கி 10 ஆயிரம் ரூபாய் பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அசோக்குமார் அளித்த புகாரின்பேரில், வேல்முருகனை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே வேல்முருகன் மீது கொலை முயற்சி வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.