"லெமன் சாதத்தில் கிடந்த பல்லி ?" - பள்ளிக்கூடத்தில் பரபரப்பு

Update: 2025-06-27 10:28 GMT

மதிய உணவில் பல்லி இருந்ததாக மாணவர்கள் குற்றச்சாட்டு - ஆய்வு

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த பில்லாந்திப்பட்டு பகுதியில் அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இருந்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தங்களுக்கு வழங்கப்பட்ட லெமன் சாதத்தில் பல்லி இருந்ததாகவும் அதனை தூக்கி எறிந்துவிட்டதாகவும் மாணவர்கள் கூறிய நிலையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மாணவர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்