நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பெண் ஒருவரின் கல்லீரல் திருட்டு சம்பவம் தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பெண்ணின் கல்லீரல் திருட்டு மோசடி சம்பவம் தொடர்பாக புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.