இதை செய்யாவிட்டால் இனி லைசென்ஸ் ரத்து? - வெளியான முக்கிய தகவல்

Update: 2025-03-31 06:17 GMT

போக்குவரத்து விதிமீறலுக்கான இ-சலான் அபராதத்தை 3 மாதங்களுக்குள் செலுத்தாவிட்டால் டிரைவிங் லைசன்ஸை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல், சிக்னலை தாண்டி வாகனத்தை இயக்குதல் ஆகிய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக போலீசார் விதிக்கப்படும் அபராதத்தொகையில் 40 சதவீதம் மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி விதிமீறல்களுக்காக விதிக்கப்படும் அபராதத்தொகையை 3 மாதங்களுக்குள் செலுத்தத் தவறினால் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்