நடுநடுங்க வைத்த நிலச்சரிவு - மண்ணோடு புதைந்த வீடுகள்.. உடைந்து உருக்குலைந்த காட்சி
பொலிவியா தலைநகர் லா பாஸில் (La Paz) நிலச்சரிவு ஏற்பட்டதால் சுமார் 40 குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன. தகவல் அறிந்து வந்த பாதுகாப்பு குழுவினர், சேதம் அடைந்த வீடுகளில் இருந்து பொருட்களை மீட்டு மக்களிடம் ஒப்படைத்தனர். நிலச்சரிவு காரணமாக சாலைகள ஆங்காங்கே பிளவுப்பட்டு காட்சி அளிக்கின்றன. மழைக்காலம் என்பதால் லா பாஸ் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.