"கொலுசு கருத்ததுக்கு இதுதான் காரணம்.." கையோடு கூட்டத்திற்கு கொண்டு வந்த அதிமுக கவுன்சிலரால் பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி நீரால் தனது கொலுசு கறுத்து போனதாக அதிமுக பெண் கவுன்சிலர் குற்றம் சாட்டினார். கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியில் தொழிற்சாலை ரசாயன கழிவுகள் மற்று கழிவு நீர் கலந்து கருமை நிற ரசாயன படலம் படிந்து காணப்படுகிறது. இந்நிலையில், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கூட்டத்தில், இந்த சம்பவம் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது,
தாமரை ஏரி நீரால் தனது வீட்டு பாத்திரங்கள், வெள்ளி கொலுசு ஆகியவை கறுத்து போனதாக கூட்டத்தில் காண்பித்து அதிமுக பெண் கவுன்சிலர் தீபா முனுசாமி குற்றம் சாட்டினார்.