தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேல நம்பிபுரம் பகுதியில், பூவன் என்பவரது வீட்டில், அவரது மனைவியான சீதாலட்சுமி, மகள் ராம ஜெயந்தி ஆகிய 2 பேரும் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி சரக பொறுப்பு டி.ஐ.ஜி சந்தோஷ் ஹாதிமணி, மாவட்ட எஸ்பி உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்த நிலையில், முதற்கட்ட விசாரணையில், 13 பவுன் நகைகள் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.