ஒரே நாளில் நடுத்தெருவுக்கு கொண்டு வந்த விட்ட கம்பெனி - அதிர்ச்சியில் கோவை IT ஊழியர்கள்
கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய நூற்றுக்கணக்கான ஊழியர்கள், எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சார்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஃபோகஸ் எடுமெடிக்ஸ் Focus Edumatics நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று மாத ஊதியம், பணிக்கொடை, அனுபவ சான்றிதழ் உள்ளிட்டவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்தனர்.