``செத்தான்டா.. செத்தான்''.. கோவையில் பறிபோன ஜெர்மனி நாட்டு நபரின் உயிர்-கடைசி நிமிட திக் திக் வீடியோ
கோவை மாவட்டம் வால்பாறையில் யானை தாக்கி ஜெர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த 59 வயதான மைக்கேல், வால்பாறை டைகர் பள்ளத்தாக்கு அருகே பைக்கில் செல்லும்போது சாலையோரம் யானை நின்றுள்ளது. யானை இருப்பதால் செல்ல வேண்டாம் என அங்கு நின்றவர்கள் எச்சரித்தும் கேட்காமல் அவர் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.