39 வங்கி கணக்குகள்! 1 கோடியே 65 ஆயிரம் ரூபாயை சுருட்டிய நபர்! லக்கி பாஸ்கர் படத்தை மிஞ்சிய பலே மோசடி

Update: 2025-01-19 14:12 GMT

ஆன்லைன் மோசடி செய்பவர்களுக்கு தனது வங்கி கணக்குகளை வழங்கி உதவிய நபரை, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

கோவை தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்த யுவராஜ், ஆன்லைன் நிறுவனம் ஒன்றில் 1 கோடியே 65 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார். ஒருகட்டத்தில் லாபத்தொகை, வட்டி என இரண்டையும் வழங்காமல் அந்த நிறுவனம் தொடர்புகளை துண்டித்துக்கொண்டதால் சந்தேகம் அடைந்த யுவராஜ், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். விசாரணை மேற்கொண்ட போலீசார், யுவராஜ் அனுப்பிய பெரும்பாலான தொகை, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாதப்பன் என்பவரின் வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு சென்றதை கண்டறிந்தனர். அவரை பிடித்து விசாரித்ததில், ஆன்லைன் மோசடி கும்பலுக்கு, கமிஷனின் அடிப்படையில் தனது 39 வங்கி கணக்குகளை அவர் விற்றது தெரியவந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்