குழந்தை மீது ஏறி இறங்கிய புல்லட் பைக்..! நெஞ்சை உலுக்கும் சிசிடிவி... கோவையில் அதிர்ச்சி | Koavi
கோவை கண்ணப்பன் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் முருகன் நகரில் உள்ள ஒரு சாலையில் புல்லட்டில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை சாலையை கடக்க முயன்ற போது இருசக்கர வாகனம், குழந்தை மீது எதிர்பாராத விதமாக மோதி ஏறி சென்றது. படுகாயமடைந்த குழந்தையை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.