கிக் பாக்சிங்.. ``2 ஆண்டுகளாக எந்த உதவியும் கிடைக்கவில்லை'' - வீரர்கள், வீராங்கனைகள் வேதனை
இந்திய ஓபன் கிக் பாக்சிங் போட்டிகளில் 46 தங்கப்பதக்கம் உள்பட 90 பதக்கங்களை வென்ற தமிழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சென்னை வந்தடைந்தனர். டெல்லியில் நடைபெற்ற போட்டிகளில், தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேசன் சார்பில் 61 வீரர், வீராங்கனைகள் 101 போட்டிகளில் பங்கேற்று, 46 தங்கம், 22 வெள்ளி மற்றும் 22 வெண்கல பதக்கம் வென்றனர். பதக்கங்களுடன் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த வீரர்கள், கடந்த 2 ஆண்டுகளாக அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தனர்.