கொடூரமாக தாக்கிய யானைகள்.. துடித்து பலியான 3 பேர் - உயிருக்கு போராடும் 12 பேர்.. 30 பேர் நிலை?
கேரளாவில் கோயில் திருவிழாவின்போது பட்டாசு வெடித்ததில் மிரண்டு போன இரண்டு யானைகள் தாக்கியதில் இரண்டு மூதாட்டிகள் உட்பட மூன்று பேர் பலியாகி உள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யானைகள் தாக்கியதில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், அதில் 12 பேர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோழிக்கோடு அருகே கோயிலாண்டி பகுதியில் மணக்குளங்கரை கோயில் திருவிழாவின் போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.