``உங்கள எல்லாம் வச்சிக்கிட்டு..'' - அன்புமணியை நோகடித்த தொண்டர்கள்

Update: 2025-08-01 03:54 GMT

பாமக தொண்டர்களால் அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்

கும்மிடிப்பூண்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, பட்டாசு வெடித்த தொண்டர்களைக் கண்டு, அவர் ஆதங்கம் அடைந்தார். தமிழகத்தில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள அன்புமணி, கும்மிடிப்பூண்டி பஜாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது, தொண்டர்கள் சிலர் மேடையின் எதிர்புறம் திடீரென பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தனர். இதனால், அதிக சத்தம் ஏற்பட்டு அன்புமணி கூட்டத்தில் தொடர்ந்து பேச முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, அன்புமணி ஆதங்கத்துடன் தொண்டர்களை நோக்கி பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்