கவின் கொலைக்கு முன் அரிவாளுடன் போட்டோ பதிவிட்ட இளைஞர்
நெல்லையில் இளைஞர் கவின் கொலை சம்பவத்திற்கு முன்னதாக வழக்கில் கைதான இளைஞர் சுர்ஜித் அரிவாளுடன் இன்ஸ்டாவில் ரீல்ஸ் பகிர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் கவினை படுகொலை செய்ததாக 24 வயதான சுர்ஜித்தை கடந்த 27ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.
கொலை சம்பவம் நடந்ததற்கு சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரிவாளுடன் இருப்பது போன்ற புகைப்படங்களை சுர்ஜித் பதிவேற்றம் செய்துள்ளார்.
இதனை பகிர்ந்து சமூக ஆர்வலர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.