பணியாளர்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து - பெண் உயிரிழப்பு
கரூர் அருகே டெக்ஸ்டைல் நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றி சென்ற மினி வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரூரில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்திற்கு பஞ்சப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, தினசரி வேலைக்கு ஆட்கள் அழைத்து வரப்படுகின்றனர். புலியூர் என்கிற இடத்தில், பணியாளர்களை ஏற்றி வந்த மினி வேனின் டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சித்ராதேவி என்கிற 35 வயது பெண் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 6 பேர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.