Karaikkudi Bar Issue | அரசு போட்ட பூட்டை உடைத்த தனியார் பார் ஓனர்
அரசு போட்ட பூட்டை உடைத்த தனியார் பார் உரிமையாளர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசாங்கம் போட்ட பூட்டை, தனியார் மதுபான விடுதியின் உரிமையாளர் உடைத்த செயலால் பரபரப்பு ஏற்பட்டது. பர்மா காலனி பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் மதுபான விடுதிக்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 19ம் தேதி சார் ஆட்சியரே நேரில் வந்து பூட்டு போட்டார். இந்நிலையில் பூட்டை உடைத்து அங்கு வியாபாரம் நடந்துள்ளது. இதனை தட்டிக்கேட்க வந்த வட்டாட்சியரிடமும், தனியார் மதுபான விடுதியின் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.