நேற்று திறக்கப்பட்ட குமரி கண்ணாடி பாலம்... ஏமாற்றம் அடைந்த மக்கள்

Update: 2024-12-31 03:07 GMT

கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலையில் லைட் ஷோவை காண இரவிலும் ஏராளமானோர் குவிந்தனர். வழக்கமாக, குமரி முக்கடல் பகுதியில் திருவள்ளுவர் சிலை அருகே சூரிய உதயத்தை காண்பதற்காகவே கூட்டம் அலை மோதும். தற்போது, புதிதாக கண்ணாடி பாலம் திறக்கப்பட்டு, திருவள்ளுவர் சிலை வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, லேசர் ஷோ நடத்தப்பட்டது. இதை, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் இரவிலும் கூட்டமாக திரண்டு ரசித்தனர்.திருவள்ளுவர் சிலையில் வண்ண லேசர் ஷோ ஏதிர்பார்த்த அளவு இல்லை என சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக திருவள்ளுவர் சிலையில் மின் விளக்குகள் இருக்கும் நிலையில், லேசர் ஷோவை காண ஆர்வமுடன் ஏராளமானோர் குவிந்தனர். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால் ஏமாற்றமடைந்த‌தாக கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்