Kanyakumari | வேலைக்குச் செல்ல வற்புறுத்திய தந்தை.. தின்னரை தீர்வாய் நினைத்து மகன் செய்த கொடூரம்
கன்னியாகுமரியில் மகன் தீ வைத்து எரித்த நிலையில், தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பளுகல் அருகே முள்ளுவிளை பகுதியை சேர்ந்த சிகாமணி கூலித் தொழிலாளியாக பணிசெய்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது இளைய மகன், சுனில் குமார் வேலைக்கு செல்லாமல் இருந்ததை தந்தை கண்டித்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறிய மகன் சுனில் குமார் தின்னரை தந்தை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார், அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.சிகிச்சை பலனின்றி கிசாமணி உயிரிழக்கவே, தீ வைத்த மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.