பண்ருட்டி அருகே நடந்த தொல்லியல் கள ஆய்வின்போது 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர காலத்திய இரண்டு செம்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த உளுத்தாம்பட்டு தென்கெண்ணை ஆற்றுப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், மேற்புற கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது, இரண்டு செம்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை, 15ம் நூற்றாண்டை சேர்ந்த, விஜயநகர காலத்திய நாணயங்கள் என்பது தெரிய வந்துள்ளது. நாணயத்தின் முன் பக்கத்தில் யானை ஓடுவது போலவும், யானையின் மேல் பகுதியில் கன்னட எழுத்தில் "ல" என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.